Palamedu Jallikattu : சீறிப்பாயும் காளைகளுக்கும் அசால்ட் செய்யும் வீரர்களுக்கும் என்னென்ன பரிசு?
உலகப்புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு காலை 7 மணிக்கு மேல் வீரர்கள் உறுதிமொழி ஏற்புடன் தொடங்கியது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇப்போட்டியில் பங்கேற்க ஆயிரம் காளைகளும், 700 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது
ஆன்லைன் டோக்கன் பெற்ற மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கு மறு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் அனுமதி அளிக்கப்பட்டது.
போட்டியில் முதல் இடத்தில் சிறப்பாக களம் காணும் காளைக்கு முதல் பரிசாக ஒரு நிசான் கார் மற்றும் மாடுபிடி வீரருக்கு ஒரு நிசான் கார் வழங்கப்படவுள்ளது.
2ஆவது சிறந்த களம் காணும் காளைக்கு கன்றுடன் கூடிய காங்கேயம் நாட்டு பசுமாடும், 2 ஆம் இடம் பிடிக்கும் மாடுபிடி வீரருக்கு Apache பைக் பரிசும் வழங்கப்படவுள்ளது
போட்டியின்போது சிறப்பாக களம் கண்டு காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கும், சிறப்பாக களமாடும் காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள் முதல் பிரிட்ஜ், டிவி, கட்டில், சைக்கிள், அண்டா, கட்டில் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளும் வழங்கப்படவுள்ளது
போட்டியை பார்வையிடும் பார்வையாளர்களுக்கு குடிநீர், தற்காலிக கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பேரூராட்சி நிர்வாகம் செய்துள்ளது
போட்டியில் பாதுகாப்பிற்காக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டோங்க்ரே பிரவின் உமேஷ் தலைமையில் 1500 காவல்துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்
மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவக்குழுக்கள், காளைகளுக்கான மருத்துவக்குழுக்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ்கள் மற்றும் கால்நடை ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு நிலைய வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
போட்டி முழுவதும் கண்காணிப்பு கேமிராக்கள் மூலமாக கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது. போட்டி நடைபெறும் வாடிவாசல் முன்பாக 50 அடி வரை தேங்காய்நார் பரப்பபட்டுள்ளது
காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்காக ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு வண்ணங்களிலான சீருடைகளில் ஒவ்வொரு சுற்றிற்கும் 50 மாடுபிடி வீரர்கள் வரை களமிறங்குவார்கள்
ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு சுற்று நடைபெறும் எந்தவித இடைவேளை இன்றியும்போட்டி தொடந்து காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -