Maatu Pongal 2024 : சொந்த மாடுகளுக்கு அலங்காரம் செய்து அழகு பார்த்த சேலம் மக்கள்!

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருவிழா தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
தை முதல் நாளான நேற்று சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் பொங்கல் படையலிட்டு வணங்கினர்.

அதனை தொடர்ந்து 2 ஆம் நாளான இன்று உழவுக்கு உயிரூட்டும் விதமாகவும், விவசாயத்திற்கு பயன்படும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் மாட்டுப் பொங்கல் திருவிழா தமிழகம் முழுவதும் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டம் குரும்பப்பட்டி பகுதியில் உள்ள விவசாயிகள் அதிகாலையிலேயே எழுந்து தங்களின் செல்ல பிள்ளையாகவும், உயிர்த் தோழானாகவும் இருந்து உழைத்த கால்நடைகளை குளிப்பாட்டினர்.
அவற்றை போற்றி நன்றி கூறும் வகையில், மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, வண்ண பொடிகள் பூசி அழகு சேர்த்தனர். பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி மாடுகளுக்கு பொங்கல், கரும்பு, வாழைப்பழம் ஆகியவற்றை ஊட்டி மகிழ்ந்தனர்.
ஒவ்வொரு வருடமும் பொங்கல் திருநாளுக்கு பின் வரும் மாட்டுப்பொங்கலன்று, ஊரே களைகட்டும் விதமாக கொண்டாட்டம் பலமாக இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -