பிரம்மபுரீஸ்வரர் கோயில் தைப்பூச விழா கோலாகலம்..யானை வாகனத்தில் எழுந்தருளிய சந்திரசேகரர்!
அருள்மிகு ஸ்ரீ பட்டுவதனாம்பிகை சமேத அருள்மிகு ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகாஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் பெருநகர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பட்டுவதனாம்பிகை சமேத அருள்மிகு ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் கோயில் ( Perunagar Brahmapureeswarar Temple) அமைந்துள்ளது
இக்கோயிலில் சுயம்புலிங்கமாக மூலவர் காட்சியளிக்கிறார். மூலவர் சன்னதி கஜபிரதிஷ்டை பச்சை கருங்கல்லால் கட்டப்பட்டது.
இக்கோவிலில் ஈசான மூலையில் பச்சை கல்லிலான மகா பைரவர் வாகனமின்றி தனித்து காட்சியளிப்பது கூடுதல் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.
இக்கோவில் காஞ்சி மாநகரின் தென் எல்லையாக கச்சியப்ப முனிவரால் போற்றப்படுகின்ற திருத்தலம் கோவிலில் பல்வேறு விழாக்கள் மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அந்தவகையில், பெருநகர் அருள்மிகு ஸ்ரீ பட்டுவதனாம்பிகை சமேத அருள்மிகு ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் தைப்பூசம் விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 15-ஆம் தேதி வெகு விமரிசையாக தைப்பூச விழா துவங்கியது
இதனை அடுத்து கொடியேற்றம் நடைபெற்றது. பகல் மற்றும் இரவு வேளையில் சுவாமி புறப்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஆறாம் நாள் காலை திருக்கல்யாணம் ரிஷப வாகன சேவை மற்றும் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
தைப்பூச பெருவிழாவில் இரவு உற்சவங்கள் சிறப்பு இடத்தை பிடிக்கும். நேற்று இரவு திருக்கோவிலில் சுவாமி யானை வாகனத்தில், எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவிற்கான ஏற்பாட்டை கிராம பெரியோர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
கடந்த 15ம் தேதி பொங்கல் பண்டிகையாக தை மாதம் பிறந்தது. இதையடுத்து, தைப்பூச கொண்டாட்டத்திற்கு முருக பக்தர்கள் தயாராகி வருகின்றனர். நடப்பாண்டிற்கான தைப்பூசம் வரும் 25ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த தைப்பூசமானது குரு பகவானுக்கு உரிய வியாழக்கிழமை வருகிறது.
தை மாதத்தில் வரும் பூசம் நட்சத்திரமே தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. வரும் 25ம் தேதி காலை 9.14 மணி முதல் அடுத்த நாள் ஜனவரி 26ம் தேதி காலை 11.07 மணி வரை பூசம் நட்சத்திரம் உள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -