Lakhimpur Violence Updates: உத்தரபிரதேசம் லக்கிம்பூர் படுகொலை சம்பவத்தில் இதுவரை நடந்தது என்ன? புகைப்படத் தொகுப்பு இங்கே
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா வாகனத்தை எற்றியதிலும், காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதிலும் விவசாயிகள், பத்திரிக்கையாளர்கள், பொதுமக்கள் என எட்டு பேர் படுகொலை செய்யப்பட்டனர்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட ஷாஹீத் நச்சதர் சிங் இன் குடும்ப உறுப்பினர்களுக்கு ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் நேரில் சந்தித்து ஆறுதல் அளித்தனர்
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் தங்களுக்கு நீதி வேண்டும் என்றும் அமைச்சர் ராஜினாமா செய்யாதவரை மற்றும் அவரது மகன் கைது செய்யப்படாத வரை நீதி கிடைக்காது என்றும் கூறியுள்ளனர் - பிரியங்கா காந்தி
லக்கிம்பூர் கேரி விவசாயிகள் போராட்டத்தில் 8 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு, ஒரு நபர் ஆணையத்தை உத்தர பிரதேச அரசு அமைத்துள்ளது. ஓய்வுபெற்ற முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபது பிரதீப் குமார் ஸ்ரீவஸ்தவ் தலைமயிலான இந்த விசாரணைக் குழு, தனது அறிக்கையை இரண்டு மாதங்களுக்குள் சமர்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், லக்கிம்பூர் படுகொலை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரப் பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
லக்கிம்பூர் படுகொலை சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக எம்.பி வருண் காந்தி, கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்
மக்களிடம் அரசுக்கு தார்மீகப் பொறுப்பு உள்ளது. அவரது மகன் நிரபராதி என்று அமைச்சர் அஜய் மிஸ்ரா நினைத்தால், தார்மீகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு ராஜினாமா செய்துவிட்டு, தனது மகன் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டவுடன் மீண்டும் பதவியில் அமர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் - பிரியங்கா காந்தி
- - - - - - - - - Advertisement - - - - - - - - -