rahul gandhi Lucknow Visit : லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை சம்பவம் - புகைப்படத் தொகுப்பு
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா வாகனத்தை எற்றியதிலும், காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதிலும் 8 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவிவசாயிகள் போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட 8 பேர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற சென்ற பிரியங்கா காந்தியை காவல்துறையினர் கைது செய்தனர்
மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை உடனடியாக கைது செய்ய வேண்டும் - பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்ட சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது
கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களை ராகுல் காந்தி இன்று சந்திப்பதாக அறிவித்தார். முதலில், இதற்கு அனுமதி மறுத்து அம்மாநில அரசு, பின்னர் அரசியல் நெருக்கடி காரணமாக அனுமதி வழங்கியது
ஜனநாயக முறையிலான போராட்டங்களை ஒடுக்குவதற்கு ஒரு எல்லை உள்ளது. ஒடுக்குமுறை தீவிரமடைந்தால் ஆட்சியாளர்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பெரும் கிளர்ச்சி வெடிக்கும் - ராகுல் காந்தி
மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுப்பதாக அமையும் என்பதை ஒன்றிய அரசு உணர வேண்டும் என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -