Siddaramaiah wishes ISRO : விழுப்புரத்தை சேர்ந்த வீரமுத்துவேலுக்கு வாழ்த்து தெரிவித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா!
சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நேற்று மாலை 6.04 மணியளவில் தரையிறக்கப்பட்டது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅதன்பிறகு லேண்டரில் இருந்து ரோவரை தரையிறக்கும் பணி தொடங்கியது. இந்த பிரக்யான் ரோவர் சுமார் 14 நாட்கள் நிலவில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. சந்திரயான் முழு கட்டுப்பாட்டையும் பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து மேற்கொள்ளப்படுகிறது.
இதையடுத்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அந்தரிக்ஷ் பவனில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துளார்.
இஸ்ரோ மையத்தின் தலைமை அதிகாரி சோம்நாத்திற்கு கர்நாடகா முறைப்படி தலைப்பாகை அணிவித்து கவுரவித்துள்ளார்.
அதேபோல் சந்திரயான் 3 திட்டத்தின், இயக்குனராகவும், முக்கிய மூளையாகவும் இருந்து செயல்பட்ட தமிழ்நாட்டின் விழுப்புரத்தை சேர்ந்த வீர முத்துவேலுக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி அவரின் வாழ்த்தை தெரிவித்தார்.
இஸ்ரோ மையத்தின் விஞ்ஞானிகள் அங்குள்ள செயல்பாடுகளை முதலமைச்சர் சித்தராமையாவுக்கு விளக்கினார்கள்
இறுதியாக இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -