Pragyan Rover : நிலவில் கால் பதித்த சந்திரயான் 3ன் பிரக்யான் ரோவர் - பிரத்தியேகமான வீடியோவை வெளியிட்ட இஸ்ரோ!
நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால், விண்ணில் செலுத்தப்பட்டது தான் சந்திரயான் 3 விண்கலம். (Photo Credits : ISRO)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App40 நாட்கள் பயணத்தை தொடர்ந்து கடந்த 23ம் தேதி மாலை 6.04 மணியளவில், திட்டமிட்டபடி நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியது. (Photo Credits : ISRO )
இதனிடையே விக்ரம் லேண்டர் தரையிறங்கிய 6 மணி நேரத்திற்குப் பிறகு, அதனுள் இருந்த பிரக்யான் ரோவர் வெளியேறியது.(Photo Credits : ISRO )
இந்த ரோவர் நிலவில் சுமார் 100 மீட்டர் முதல் 500 மீட்டர் வரை செல்லும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த ரோவரின் ஆய்வு நாட்கள் 14 நாட்கள் ஆகும். (Photo Credits : ISRO)
இந்த ரோவர் நிலவில் உள்ள நீராதாரம், கனிம வளங்கள், நிலவின் அமைப்பு, தோற்றம் மற்றும் நிலவின் வளிமண்டலம் என பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆராயப்பட உள்ளன. (Photo Credits : ISRO)
இதுதொடர்பான காட்சிகளை இஸ்ரோ தற்போது தனது இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -