Independence Day 2024: நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட 78-வது சுதந்திர தின விழா - சமீபத்திய புகைப்படகள்!
சுதந்திர தினத்தையொட்டி, டில்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்து, பாரத் மாதா கி ஜே என்று கூறி பிரதமர் மோடி உரையில் குறிப்பிட்டு பேசினார். 'வரும் 2047ல் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாறும். நாட்டு மக்கள் அகண்ட பாரதத்துக்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும்,'' என சுதந்திர உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App140 கோடி பேரும் இணைந்து வளர்ந்த இந்தியாவை சாத்தியமாக்குவோம். ஜல் ஜீவன் திட்டத்தால் 15 கோடி குடும்பங்கள் பலன் பெறுகின்றன. சுவாச் திட்டம் மூலமாக இரண்டரை கோடி குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. மக்களிடம் இருந்து வரும் பரிந்துரைகளும் கருத்துகளும் எனக்கு உத்வேகம் அளிக்கின்றன என்று பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.
இலங்கையில் உள்ள Maduruoya பகுதியில் அமைந்துள்ள இராணுவ பயிற்சி பள்ளியில் சுதந்திர தின கொண்டாட்டம்.
இந்தியா - இலங்கை இராணுவ வீரர்கள் 10-வது முறையான MITRA - SHAKTI இடையே சுதந்திர தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி மேற்கொண்டனர்.
75 ஆயிரம் புதிய மருத்துவ இடங்கள் கொண்டு வரப்படும். கல்வித்துறையில் மாற்றம் கொண்டு வர விரும்புகிறோம். வேளாண் சீர்திருத்தங்களே தற்போதைய தேவை. வரும் நாட்களில் நாட்டை இயற்கை உணவு மையமாக மாற்ற முயற்சி செய்கிறோம். உலகத்தரமான செல்போன்கள் இறக்குமதி என்ற நிலை மாறி, உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது என்று பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -