Kanchanjunga Train Accident: அந்தரத்தில் நின்ற பெட்டி.. மேற்கு வங்க ரயில் விபத்தின் புகைப்படங்கள்!
மேற்கு வங்கத்தில் சியாஸ்டா செல்வதற்காக நின்று கொண்டிருந்த கஞ்சன்ஜங்கா பயணிகள் விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளதால் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவ இடத்தில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடந்து வருவதாகவும், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுமதிக்க 30க்கு மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி தெரிவித்தார்.
மேற்கு வங்க பயணிகள் விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்து இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
படுகாயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமைடந்த நிலையில், சரக்கு ரயில் ஓட்டுநரும் உயிரிழந்தார்.
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள பதிவில், “மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ரயில்கள் மோதல் எதிர்பாராத விபத்து. அங்கு போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரயில்வே, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் ஆகியோர் ஒருங்கிணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -