Chandrababu Naidu : சட்டமன்ற தேர்தல் வெற்றியை குடும்பத்துடன் கொண்டாடிய சந்திரபாபு நாயுடு!
இந்தியாவின் 18-வது மக்களவைத் தேர்தலுடன் அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்களும் நடைபெற்றது. ல் தெலுங்கு தேசம் கட்சியும், ஆளும் கட்சியாக இருந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் நேருக்கு நேர் மோதின. 175 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டது.
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான கூட்டணியில் பாஜகவும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் இணைந்து தேர்தலை சந்தித்தது.இன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் தெலுங்கு தேசம் கட்சி 133 இடங்களிலும், ஜனசேனா கட்சி 21, பாஜக 8, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் 13 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. இதை சந்திரபாபு நாயுடு குடும்பத்துடன் வெற்றியை கொண்டாடினார்.
சந்திரபாபு நாயுடுவின் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் தெலுங்கு தேசம் கட்சி 133 இடங்களிலும், ஜனசேனா கட்சி 21, பாஜக 8, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் 13 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. இதில் 88 இடங்களை வென்றால் ஆந்திராவில் ஆட்சியமைக்கலாம் என்ற நிலையில் தேவைக்கு அதிகமாக தனிப்பெரும்பான்மையுடன் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியமைக்க உள்ளது.
ஜூன் 9 ஆம் தேதி ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே பிரதமர் மோடி ஆந்திர சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்காக தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அதேபோல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அனைவரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சந்திரபாபு நாயுடு,கட்சியினர் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.