Vande Bharat Sleeper : ரயிலில் குளியல் வசதியா? வந்தே பாரத் ஸ்லீப்பரில் இதெல்லாமா இருக்கு?
தனுஷ்யா Updated at: 02 Sep 2024 05:38 PM (IST)
1
மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் அளவிற்கு வடிவமைக்கப்பட்ட ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயிலில் 16 கோச்கள் உள்ளன.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
11 மூன்றாம் வகுப்பு ஏசி கோச்கள், 4 இரண்டாம் வகுப்பு ஏசி கோச்கள், 1 முதல் வகுப்பு ஏசி கோச் என மொத்தம் 823 படுக்கைகள் உள்ளன.
3
ஒவ்வொரு படுக்கையிலும் அதிநவீன விளக்குகள், சார்ஜ் போர்ட், நாய்களை கூடே அழைத்து செல்வதற்கான பெட்டி, லக்கேஜ் வைப்பதற்கான இடம் உள்ளது
4
ப்ரெஷ்ஷான உணவு கிடைப்பதற்கான வசதியும், அதை வைத்து சாப்பிடுவதற்கான மடக்கி வைக்ககூடிய டேபிள் வசதியும் உள்ளது. சீரான அளவில் சுத்தமான ஏசி காற்று கிடைப்பதற்காக HVAC சிஸ்டம் உள்ளது.
5
அனைவரும் வசதியாக பயணம் செய்ய, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கழிப்பறைகள் உள்ளன. முதல் வகுப்பு கோச்சில் உள்ள கழிப்பறையில் குளிக்கும் வசதியும் இருக்கும்.