TN Lok Sabha Election 2024 : முதல்வர் ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை.. வாக்குப்பதிவு செய்த அரசியல் தலைவர்கள்!
தமிழக முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலினுடன் தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்கு செலுத்தினார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்தியா கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தனது வாக்கினை அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரிய திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்
திண்டிவனத்திலுள்ள மரகதாம்பிகை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடி மையத்தில் தர்மபுரி பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி வாக்கு செலுத்தினார்
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வாக்கு பதிவு செய்தார்..
திண்டிவனத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி வாக்கு பதிவு செய்தார்..
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தேனி தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
கோவை தெற்கு பகுதியின் சட்டமன்ற உறுப்பினர், பாஜக மகளிரணி தலைவி வானதி சீனிவாசன், கோவையில் வாக்கு பதிவு செய்தார்.
ஓ. பன்னீர் செல்வத்தின் மகனான ஓ.பி.ரவீந்திரநாத், சொந்த ஊரான தேனியில் வாக்கு பதிவு செய்தார்.
கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும் - முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் வடிவேல் நகரில் ஓட்டு போட்டார்
தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி சென்னை மைலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில், தனது வாக்கினை செலுத்தினர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினர்
மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார்
சேலம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள நெடுங்குளம் ஊராட்சி சிலுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தார்
அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி சிறுமலர் தொடக்கப்பள்ளியில் வாக்கு செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
திருச்சி தில்லை நகர் பகுதியில் உள்ள மக்கள் மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தனது வாக்கினை செலுத்தினார்.
அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்றினார்.
அமைச்சர் பி.டி.ஆர்., பழனிவேல் தியாகராஜன் மதுரை சொக்கிகுளம் பகுதியில் வாக்களித்தார்.
மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், அவரது குடும்பத்துடன் வாக்கு பதிவு செய்தார்.
சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த சரத்குமாரும், ராதிகா சரத்குமாரும் அவர்களது மகள் வரலட்சுமியுடன் வாக்குப்பதிவு செய்தனர்.
கரூர் பாராளுமன்ற தேர்தலையொட்டி முதல் கட்ட வாக்குப்பதிவில் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஊத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தனது தாயாருடன் வாக்கு செலுத்தினார்.
நடிகை மற்றும் பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினரான குஷ்பு, கணவர் சுந்தர் சி, மகள்களுடன் சென்று வாக்களித்தார்.
தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தனது வாக்கினை செலுத்தினார்
தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தனது வாக்கினை செலுத்தினார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -