PM Modi in Assam : அசாமில் பிரதமர் மோடி.. யானைக்கு கரும்பு ஊட்டி நெகிழ்ச்சி!
பாராளுமன்ற தேர்தல் களம் அனல் பறக்கும் நிலையில், பிரதமர் மோடி இந்தியாவெங்கும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்நிலையில்,அவருக்கு அசாம் மாநிலம் கோலாகாட் மாவட்டத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அசாமின் மாறுபட்ட அழகான கலாச்சாரத்தை பார்வையிட்டு ரசித்தார்.
இன்று காலை அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவிற்கு மோடி சென்றுள்ளார்.
நமது காடுகளையும் வனவிலங்குகளையும் துணிச்சலுடன் பாதுகாத்து, முன்னணியில் இருக்கும் பெண் வனக் காவலர்களின் குழுவான வனா துர்காவுடன் உரையாடினார்.
பல்வேறு தாவரங்களையும் விலங்குகளையும் கண்டு அசந்து போனார்.
யானையின் மீது அமர்ந்த படியே, காசிரங்கா தேசிய பூங்காவை வலம் வந்தார்.அத்துடன் ஜீப் சவாரி சென்று ஒட்டுமொத்த இடத்தையும் பார்வையிட்டார்
லக்கிமை, பிரத்யும்னன் மற்றும் பூல்மை ஆகிய மூன்று யானைகளுக்கு கரும்பு ஊட்டினார்.
காண்டாமிருகங்களுக்கு பெயர் பெற்ற காசிரங்காவில் பல யானைகளும் மற்ற விலங்குகளும் உள்ளன என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -