Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Odisha Train Accident : இந்தியாவை உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து.. பதைபதைக்க வைக்கும் புகைப்படங்கள்!
பெங்களூருவிலிருந்து ஹவ்ராவிற்கு சென்று கொண்டு இருந்த ரயில் ஒடிசாவில் தடம் மாறி பக்கத்து ரயில்வே தடத்தில் சாய்ந்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபின் கொல்கத்தாவில் இருந்து நேற்று மதியம் 3:20 மணிக்கு கிளம்பி சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஒடிசாவில் விபத்தில் சிக்கி கீழே சாய்ந்திருந்த பெங்களூர் - ஹவ்ரா ரயில் மீது மோதியது.
அப்போது ஒடிசா வழியாக சென்று கொண்டிருந்த சரக்கு ரயில், விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மீது மோதியது. இந்த சம்பவம் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்த பிரதமர் மோடி, “ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தால் பலரும் வேதனை அடைந்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது இறங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஒடிசா விபத்து பகுதியை ஆய்வு செய்தார். விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன, பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன.” என பதிவிட்டார்.
கலைஞர் கருணாநிதியின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டம் இன்று நடைபெறவிருந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விபத்து நடந்த பகுதியை ஆய்வு செய்ய ஒடிசாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233 ஆக உயர்ந்துள்ளதாகவும் 900-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் ஒடிசா தலைமைச் செயலாளர் அறிவித்துள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -