Southwest Monsoon : முடிவுக்கு வந்தது வெயிலின் தாக்கம் - இன்னும் சில தினங்களில் தொடங்கும் பருவமழை - விவரம் இதோ !
இந்தியா முழுவதும் வெப்ப அலை ஓய்ந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநடப்பாண்டில் இந்தியாவின் பல மாநிலங்களில் கடுமையாக வெயில் வாட்டி வதைத்தது. தமிழ்நாட்டிலும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நிலவி வருகிறது
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி இன்னும் 2 நாட்களில் தென்கிழக்கு வங்காள விரிகுடா, நிக்கோபார் தீவுகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை பெய்வது வழக்கம்
அதன்படி ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் கேரளாவில் தொடங்கும் பருவமழையானது படிப்படியாக கர்நாடகா, மும்பை, கோவா, கொல்கத்தா ஆகிய நகரங்களில் மழை பெய்யத் தொடங்கும்
முன்னதாக கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறிய வானிலை மையம், ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, உத்தரப்பிரதேசம், அரியானா, சதீஸ்கரில் ஆலங்கடி மழை பெய்யலாம் எனவும் கணித்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -