PM Modi Tejas : தேஜஸ் போர் விமானத்தில் ஏறி விண்ணில் பறந்த பிரதமர் மோடி..காட்டுத்தீயாய் பரவி வரும் புகைப்படங்கள்..!
பெங்களூருவில் செயல்பட்டு ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் நிறுவனம் இந்திய ராணுவத்திற்கு தேவையான இலகுரக விமானங்கள், போர் விமானங்கள் போன்றவற்றை தயாரித்து வருகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்நிலையில், அந்நிறுவனத்திடம் இருந்து 12 Su-30MKI ரக போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
அதன்படி இன்று அந்த நிறுவனத்தில் ஆய்வுகளை மேற்கொண்டார் பிரதமர் மோடி.
அப்போது அவர் அங்கிருந்த தேஜஸ் போர் விமானத்தில் பயணம் செய்துள்ளார்.
தற்போது மோடி, தேஜஸ் விமானத்தில் பயணம் செய்வது போன்ற புகைப்படங்களும் போர் வீரர்களுக்கான சீருடை அணிந்திருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், “தேஜஸ் விமானத்தில் ஒரு பயணம் வெற்றிகரமாக முடிந்தது. இந்த அனுபவம் நம்பமுடியாத அளவிற்கு என்னை செழுமைப்படுத்தியுள்ளது. நமது நாட்டின் பூர்வீக திறன்கள் மீதான எனது நம்பிக்கையை கணிசமாக உயர்த்தியது. மேலும் நமது தேசிய திறனைப் பற்றிய புதிய பெருமை மற்றும் நம்பிக்கையை எனக்கு அளித்தது” என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -