5 Years of Demonetisation: 500,1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு.. நினைத்தது என்ன? நடந்தது என்ன?
500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழப்பு செய்யப்பட்டு இன்றுடன் ஐந்து ஆண்டுகள் நிறைவடைகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமதிப்பிழப்பு செய்யப்பட்ட 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் பெருமளவு வங்கிகளில் செலுத்தப்பட்டுவிட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்தது
மதிப்பிழப்பு எதிர்க்குரல்: இந்த நோட்டுகள் எல்லாம் வங்கிகளுக்கு திரும்ப வந்துவிட்டதால் மட்டுமே பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கம் வெற்றி பெறவில்லை என்று நிபுணர்கள் கருத்து தெரிவிகின்றனர்.
ஆதரவுக் குரல்: தரவுகளைப் பாருங்கள்- 2014 மார்ச் நிலவரப்படி, வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 80 லட்சமாகும். 2017-18-ல் இந்த எண்ணிக்கை 6 கோடியே 86 லட்சமாக உயர்ந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பணமதிப்பிழப்பு மற்றும் இதர நடவடிக்கைகளின் தாக்கத்தை ஆராயும் போது வருமான வரிக் கணக்குகள் 19% லிருந்து 25%- மாக உயர்ந்துள்ளது. இது மிகவும் குறிப்பிடத்தக்க உயர்வாகும்.
எதிர்ப்புக் குரல்: வரி செலுத்தும் சமுதாயமாக என்பது தீவிர சமத்துவ அரசியலில் இருந்து தான் தொடங்க வேண்டும். அனைவரும் வரி செலுத்த வைக்க வேண்டும் என்பதுதான் நோக்கமானால் அது படிப்படியாக செயல்முறை படுத்தியிருக்க வேண்டும். 2000ம் ஆண்டில் பொருளாதாரம் நன்கு வளர்ச்சியடைந்து காணப்பட்ட போது கூட வரி வசூலும், நேரடி வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்பட்டது
ஆதரவுக்குரல்: ரொக்கம் வங்கியில் செலுத்தப்படும் போது இந்த ரொக்கத்தின் சொந்தக்காரர் குறித்த நிலை தெளிவாகிறது. செலுத்தப்பட்ட ரொக்கம் அதன் சொந்தக்காரருடன் இணைத்து அடையாளம் காணப்படுகிறது. இதனையடுத்து செலுத்தப்பட்ட தொகை செலுத்தியவரின் வருமானத்திற்கு ஏற்றவாறு அமைந்துள்ளதா என்ற விசாரணைக்கு அது இடம் கொடுக்கிறது. இவ்வாறு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு இத்தகைய விசாரணைக்கு 18 லட்சம் டெபாசிட்தாரர்கள் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் பலருக்கு வரியும், அபராதமும் விதிக்கப்பட்டன. உதரணாமாக, இந்தியாவில் ஜன்தன் வங்கி கணக்கு பயனாளர்களும், அதன் டெபாசிட் தொகையும் மதிப்பிழப்பு நடவடிக்கைகக்குப் பிறகு அதிகரித்துள்ளது
எதிர்ப்புக்குரல்: வங்கிகளில் ரொக்கத்தை செலுத்துவதால் மட்டுமே அந்தப் பணம் வரிசெலுத்தப்பட்ட பணம் என்று கருத இயலாது. 2017ல் ஜன்தன் வங்கியில் உள்ள சராசரி டெபாசிட் தரவுகளைப் பாருங்கள். பணமதிபழிப்புக்குப் பிறகு சராசரி டெபாசிட் அதிகரித்தது. ஆனால், அடுத்ததடுத்த ஆண்டுகளில் குறையத் தொடங்கியது. எனவே, செல்வந்தர்கள் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி தங்கள் ரூபாய் நோட்டுகளை மாற்றியுள்ளனர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -