Covid-19 Cases: வரும் மாதங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சம் வரை அதிகரிக்கலாம் - மத்திய அரசு
கடந்த 24 மணி நேரத்தில் 21,257 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. 2,40,221 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅடுத்த மூன்று மாதங்கள் கொரோனா நடத்தைமுறைகளை பின்பற்றுவது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. வரும் நாட்களில் தினசரி சராசரி பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சம் வரை அதிகரிக்கலாம் என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லால் அகர்வால் தெரிவித்துள்ளார்
ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பரவிய சார்ஸ்-கோவ்-2 தொற்றுகளின் மரபணுவை ஆராய்ந்தபோது ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் புதிய வகைகள் உருவாகவில்லை என்று மத்திய அரசு தெரிவித்தது. இரண்டாவது அலையின் இறுதி கட்டமாக, நோய் எதிர்ப்பு ஆற்றல் இல்லாதவர்கள் தற்போது பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் குறிப்பிட்டது
இந்தியாவில் கடந்த பல வாரங்களாக தினமும் 20,000க்கும் மேற்பட்ட பாதிப்புகள் சராசரியாக பதிவாகின்றன. குறிப்பாக கேரளா பல்வேறு வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மகாராஷ்டிராவின் சில மாவட்டங்கள் மற்றும் ஒரு சில தென் மாவட்டங்களில் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்தியாவில் கொரோனா endemicity நிலையை நோக்கி நகர்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது
எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்புகள் அதிகரிக்கக் கூடும் என்று மத்திய சுகாதார செயலாளர் மாநிலங்களுக்கு எச்சரித்துள்ளார். தேசிய அளவில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், சில மாநிலங்களில் உள்ளூர் மட்ட பரவல் அதிகரித்து காணப்படுவதாகவும் தெரிவித்தார். ஓணம் பண்டிகைக்குப் பிறகு கேரள மாநிலத்தில் பாதிப்புகள் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டிய அவர், எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறும் கேட்டுக் கொண்டார்.
covid-19 vaccine: தடுப்பூசியின் நோய் எதிர்ப்புத்தன்மை ஆறு மாதங்களுக்குப் பின் குறைகிறது! தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் செழுத்திக் கொண்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு, ஆண்களிடத்திலும், 65 வயது கடந்த மூத்த குடிமக்கள் மத்தியிலும், Immunosuppression (எதிர்ப்பு சக்தியை மழுங்கடிக்கும் நிலை) கொண்டவர்களிடத்திலும் குறிப்பாக கணிசமான அளவில் வைரஸை எதிர்க்கும் அணுக்கள் குறைந்து காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -