Ayodhya Ram Mandir : முழுவீச்சில் நடக்கும் அயோத்தி ராமர் கோவிலின் கட்டுமான பணிகள்! கோவில் திறப்பு எப்போது தெரியுமா?
அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கின் இறுதி தீர்ப்பு வந்த பின் இந்த இடத்தில் ராமர் கோவில் கட்டப்படவுள்ளதாக அறிவிப்பு வந்தது. பின், இக்கோவில் அமைப்பின் வரைப்படமும் முப்பரிமாண மாதிரியின் புகைப்படம் வெளியானது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்திய பிரதமர் நரேந்திர மோடி கோவில் கட்டுமான பணியை, சிறப்பு பூஜைகளுடன் தொடங்கி வைத்து, அடிக்கல்லை கடந்த ஆகஸ்ட் மாதம் 2020ல் நாட்டினார்.
இப்போது உத்தர பிரதேசத்தில் அமைந்துள்ள அயோத்தி ராமர் கோவிலின் கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைப்பெற்று வருகிறது. கோவிலின் கதவுகளை சேதுக்கும் பணி வரும் செப்டம்பர் மாதம் முடிவடைய உள்ளது.
கோவிலின் கர்ப்பகிரகத்தை சுற்றி தங்க முலாம் பூசப்படவுள்ளது. இக்கோவிலில் மொத்தம் 392 தூண்களும் 46 தேக்கு கதவுகளும் இடம்பெறும். இது இக்கோவிலுக்கு பிரம்மாண்டமான தோற்றத்தை கொடுக்கும்.
தற்போது, அயோத்தியில் ராமர் கோவிலை கட்டும் பணியை புகைப்படம் எடுத்து ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அனைத்து பணிகளும் முடிந்த பின் 2024 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அந்த அறக்கட்டளை முன்னதாக அறிவித்தது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -