Rahul Gandhi Nilgiris : மக்களோடு மக்களாக..தோடர் பழங்குடியினருடன் நடனமாடிய ராகுல் காந்தி!
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு அவ்வுத்தரவு நிறுத்தி வைக்கப்பட்ட பிறகு முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி இன்று முதல் முறையாக வயநாடு தொகுதிக்கு செல்ல உள்ளார்.
இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு ராகுல்காந்தி வருகை தந்தார். அப்போது கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் கார் மூலம் சாலை மார்க்கமாக நீலகிரிக்கு வந்தடைந்தார். இதனைத்தொடர்ந்து முத்துநாடுமந்து என்ற தோடர் பழங்குடியின கிராமத்திற்கு செல்லும் ராகுல் காந்தி, பழங்குடியின மக்களுடன் கலந்துரையாடினார்.
தோடர் பழங்குடியின மக்களுடன் இணைந்து அவர்களின் பாரம்பரிய நடனத்தை ஆடும் ராகுல் காந்தி.
நீலகிரியில் தோடர் இளைஞர் தனது பலத்தை காட்டும் வகையில் இளவட்டகல் தூக்கியதை பார்வையிட்ட ராகுல் காந்தி.
மக்களோடு மக்களாக கலந்துரையாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படம்.
இதற்கு முன்பாக நாடுமுழுவதும் ராகுல் காந்தி மேற்கொண்ட ஜோட யாத்திரை வெற்றிகரமாக நடந்து முடிந்தது என்பது குறிப்பிடதக்கது.