Chandrayaan 3 : வெற்றிகரமாக நிலவு பாதையில் நுழைந்த சந்திரயான் 3 விண்கலம்; மகிழ்ச்சியில் இஸ்ரோ!
முதல் கட்டமாக, ஜூன் 14ம் தேதி விண்ணில் சந்திரயான் 3 ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்டது. (Photo Credits : ISRO)
இரண்டாம் கட்டமாக, விண்கலம் புவியின் தரைப்பரப்பில் இருந்து 170 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்றதும், அதற்கு ஒரு உந்துதல் வழங்கப்பட்டு புவியின் நீளவட்டப்பாதையில் சுற்ற வைக்கப்பட்டது. (Photo Credits : ISRO)
15 நாட்கள் ஒவ்வொரு 170 கிலோ மீட்டருக்கு உந்துதல் வழங்கப்பட்டு தற்போது டிரான்ஸ் லூனார் ஆர்பிட் எனப்படும் நிலவு பாதையில் நுழைந்துள்ளது. (Photo Credits : ISRO)
நிலவின் பாதையில் நுழையும் போது சந்திரயான் 3 தனது அதிகபட்ச உந்துதல் சக்தியை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (Photo Credits : ISRO)
இதனை தொடர்ந்து, நிலவின் தரைப்பரப்பில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் விண்கலத்தைக் கொண்டு வந்து நிலைநிறுத்துவதோடு, அதே தொலைவில் நிலவை சுற்ற வைப்பது முக்கிய கட்டமாகும். (Photo Credits : ISRO)
இது தொடர்பாக இஸ்ரோ பதிவிட்டுள்ள ட்வீட்டில், “பூமியின் சுற்றுவட்டார பாதையில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு, நிலவின் பாதையில் நுழைந்துள்ளது சந்திரயான் 3. அடுத்த நிறுத்தம் நிலவு தான்” என குறிப்பிடப்பட்டுள்ளது. (Photo Credits : ISRO)