Chandrayaan 3 Landing : நிலவில் கால் பதித்து சாதனை படைக்குமா சந்திரயான் 3 ?
முதன்முதலாக அமெரிக்கா 1958-ல் பயனியர் ஒ என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பிய முயற்சி தோல்வியில் முடிந்தது. ( Photo Credit : NASA)
ரஷ்யா அடுத்த ஆண்டே லூனா 2 என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி வெற்றி வாகை சூடியது. இந்த வெற்றி ரஷியாவின் ஆறாவது முறையில்தான் கிடைத்தது.
இந்தியா நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக முதன்முதலில் சந்திரயான் 1 விண்கலத்தை அனுப்பியது இதன் மூலம்தான் நிலவில் தண்ணீர் இருக்கும் உண்மை உலகிற்கு தெரிய வந்தது.
அதைதொடர்ந்து சந்திரயான்- 2 கடந்த 2019ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. தென் துருவத்தில் இறங்க முயன்ற போது விக்ரம் லேண்டரில் ஏற்பட்ட சிக்கலால் ரோவர் வெடித்துச் சிதறியது. ஆனால், அதேசமயம் ஆர்பிட்டர் மட்டும் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது.( Photo Credit: ISRO)
தற்போது இந்தியா சந்திராயான் 2ல் இருந்து கற்று கொண்டதை அடிப்படையாக கொண்டு சந்திராயான் 3ஐ விண்ணில் அனுப்பியது இது இன்று மாலை சரியாக 6.04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது. இந்த நிகழ்வை உலக நாடுகள் உற்று நோக்கி கொண்டுள்ளனர்.( Photo Credit: ISRO)
1976-ல் இருந்து இதுவரை சீனா என்ற ஒற்றை நாடு மட்டுமே நிலவில் சாஃப்ட் லேண்டிங்கை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. சாங்கே (Chang’e) 3 மற்றும் சாங்கே (Chang’e) 4 ஆகிய விண்கலங்கள் இதை செய்து முடித்துள்ளது.