Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
75th Republic Day : தாயின் மணிக்கொடி பாரீர்... தமிழ்நாடெங்கும் சிறப்பாக நடந்த 75-வது குடியரசு தின விழா!
இந்திய நாட்டின் 75 வது குடியரசு தினத்தினை முன்னிட்டு ஆட்சியர் பழனி விழுப்புரத்தில் தேசிய கொடியினை ஏற்றி வைத்து காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். அதனை தொடர்ந்து நடைபெற்ற மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சியினை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு மரியாதை செய்து நலத்திட்டங்கள் மற்றும் சிறப்பாக பணிபுரிந்த காவலர்கள் செவிலியர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை ஆட்சியர் பழனி வழங்கினார்.
திருச்சி ஆயுதப்படை வளாகத்தில் 75 ஆவது குடியரசு தினத்தை ஒட்டி திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தேசிய கொடி ஏற்றி, வெள்ளை புறாக்கள், வண்ணப் பலூன்கள் பறக்க விட்டார்
ராமநாதபுரம் ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள தேசிய கொடியை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் ஏற்றி வைத்தார்.
தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி தேசிய கொடியினை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உடன் உள்ளார்.
கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 75 குடியரசு தின விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தேசிய கொடியை ஏற்றி வைத்து சமாதான புறா மற்றும் வண்ண பலூன்களை பறக்க விட்ட பிறகு காவலர்களுக்கு பதக்கங்கள் சான்றிதழை வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்ட சாய் விளையாட்டு மைதானத்தின் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி 75 வது ஆண்டு குடியரசு தினவிழாவில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பெருந்திடல் வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தின் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் 75 வது ஆண்டு குடியரசு தினவிழாவில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை.மேலும் சமாதான புறாவை பறக்கவிட்டார்
சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கொடியேற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -