Ayodhya Ram Lalla : அம்மாடியோவ்.. பாலராமர் அணிந்துள்ள நகைகளின் மதிப்பு இவ்வளவா?

கிளுகிளுப்பு, யானை, குதிரை, ஒட்டகம், பொம்மை வண்டி மற்றும் பம்பரம் ஆகிய பொம்மைகள் சிலைக்கு முன்பு வைக்கப்பட்டுள்ளன.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
மாணிக்கங்கள், மரகதம், முத்து இழைகள் மற்றும் வைரங்கள் பதிக்கப்பட்டுள்ள தங்க கிரீடத்தின் எடை 1.7 கிலோ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய மாணிக்கம் மற்றும் வைரங்களால் அலங்கரிக்கப்பட்ட கௌஸ்துப மணி சிலையின் இதயத்தை அலங்கரிக்கிறது.
ராமர் சிலைக்கு அணிவிக்கப்பட்டுள்ள நீளமான நெக்லஸின் பெயர் தான் விஜயமாலா. சுதர்சன சக்கரம், தாமரை, சங்கு மற்றும் மங்கள கலசம் ஆகிய சின்னங்களை கொண்டுள்ள இந்த ஆரங்களின் மொத்த எடை 3.7 கிலோ ஆகும்
ராமர் சிலையின் நெற்றியில் உள்ள வெள்ளி-சிவப்புத் திலகம் வைரம் மற்றும் மாணிக்கங்களால் 16 கிராம் எடையில் உருவாக்கப்பட்டுள்ளது
மஞ்சள் நிற வேட்டியும் சிவப்பு நிற படகா/அங்காவஸ்திரமும் பனாரசி துணியால் நெய்யப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் சிலைக்கான ஆடை, அபரணங்களின் விலை சில நூறு கோடிகளை தாண்டும் என கணிக்கப்படுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -