Sitaram Yechury: மறைந்த சீதாராம் யெச்சூரி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் சீதாராம் யெச்சூரி. இவருக்கு வயது 72. கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி நிமோமியா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியான மருத்துவ அறிக்கையில், அவர் சுவாசப் பிரச்சினைக்காக சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், உடல்நலக்குறைவால் காலமானார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசீதாராம் யெச்சூரி 1952ஆம் ஆண்டு பிறந்தவர். இவரது குடும்பம் ஆந்திராவைப் பூர்வீகமாக கொண்டிருந்தாலும் இவர் சென்னையில் பிறந்தவர். ஆந்திரா, டெல்ல்லியில் பள்ளிப் படிப்பை முடித்து, டெல்லி ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பட்டப்படிப்பை படித்தார். தில்லி ஜவகர்லால் நேரு பல்கலையில் எம்ஏ முடித்த யெச்சூரி அவசர நிலை பிரகடனத்தின்போது கைது செய்யப்பட்டார். 1974ஆம் ஆண்டு மாணவர் கூட்டமைப்பில் சேர்ந்த யெச்சூரி, 1975ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.
பின்னர், கட்சியின் பொதுச்செயலராக உயர்ந்தார். மூன்று முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலராகத் தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கட்சியில் மத்தியக் குழு உறுப்பினர், பொலிட் பியூரோ என பல்வேறு உயர் பொறுப்புகளையும் சீதாராம் யெச்சூரி வகித்துள்ளார்.
சீதாரம் யெச்சூரியின் உடல்நிலை பாதித்திருந்தபோதும், அவர் தன்னை கட்சிப் பணிகளில் தொடர்ந்து ஈடுப்படுத்தி கொண்டார்.
கடந்த 2015ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராகத் தேர்வு செய்யப்பட்டார்.
சீதாராம் யெச்சூரி, 2005ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை சுமார் 12 ஆண்டுகள், மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது, பல்வேறு முக்கிய தலைப்புகளில் உரையாற்றி, மக்கள் பிரச்னைகளை அவைக்குக் கொண்டு சென்றுள்ளார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -