Cyclone Remal:வங்க தேசத்தை புரட்டிபோட்ட புயல்;மீட்புப் பணிகள் தீவிரம் - புகைப்பட தொகுப்பு!
வங்க கடலின் கிழக்கு பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது. இது நேற்று புயலாக வலுப்பெற்றது. வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெற்றது. இப்புயலானது 110 கி.மீ முதல் 120 கி.மீ வரை வேகத்தில் சுற்றிக் கொண்டிருந்தது. இதனால் கடரோரங்களில் இருந்த வீடுகள் கடுமையான சேதமடைந்தன.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபுயலில் முறிந்து விழுந்துள்ள மரத்தை பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புக் குழுவினர் அகற்றுகின்றனர். (Picture Courtesy: NDFR/X) )
இந்தப் புயலின் போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பேரிடர் மேலாண்மை குழு தீவிரமாக மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.(Picture Courtesy: NDFR/X)
இந்த புயலுக்கு REMAL என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ரெமல் என்றால் அரபு மொழியில் மண் என்று அர்த்தம். ஓமன் நாடு இந்த பெயரை பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது. புயல், மழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளமாக ஓடுகிறது.
புயல், பலத்த காற்று வீசியதில் Sandeshkhali பகுதியில்( Sagar island and Dantan) வீடுகள் இடிந்து விழுந்தன. வீடுகளைச் சுற்றி வெள்ள நீர் சூழ்ந்தது.(Picture Courtesy: NDFR/X)
புயலில் பாதிக்கப்பட்ட வீடு, இடிந்து விழுந்துள்ளது. பேரிடர் மீட்பு மேலாண்மை குழுவினர் இந்த கிராமத்தில் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.(Picture Courtesy: NDFR/X)
தீவிர புயலாக வலுவடைந்த ‘ரெமால் புயல்’ வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கம் அருகே கரையை கடந்தது. கடந்த 6 மணிநேரத்தில் 13 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து மோங்லா என்னும் பகுதியில் ‘ரெமல்’ புயல் கரையை கடந்தது. வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, புயல் கரையை கடந்தபோது, காற்றானது மணிக்கு 135 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இந்த புயலானது மேற்கு வங்கத்தின் சாகர் தீவுக்கும் வங்கதேசத்தின் கெயுபாடாவுக்கும் இடையே உள்ள கடற்கரையில் கடந்தது.(Picture Courtesy: NDFR/X)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -