Chandrayaan 3 : உலகமே உற்று நோக்கும் சந்திரயான் 3-ன் தரையிறக்கம் - சாதனை படைக்குமா இஸ்ரோ?
நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் கடந்த மாதம் 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇவ்விண்கலம் 39 நாட்கள் பயணம் செய்து நிலவை நெருங்கியுள்ள அந்த விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க தயாராக உள்ளது. (Photo Credits : ISRO Website)
நிலவிலிருந்து குறைந்தபட்ச தூரமாக 25 கிலோ மீட்டர் தொலைவிலும், அதிகபட்சமாக 134 கிலோ மீட்டர் தொலைவிலும் தற்போது லேண்டர் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. (Photo Credits : ISRO Website)
நாளை மாலை 6.04 மணிக்கு லேண்டரை நிலவின் மேற்பரப்பில் தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்கு இரண்டு மணி நேரம் முன்பாக சோதனை செய்யப்படும் அப்போது சூழல் சரியாக இருந்தால் நிலவின் மேற்பரப்பில் மென்மையாக தரையிறக்கம் செயல்படுத்தப்படும்.
சூழல் சாதகமாக இல்லை எனத் தோன்றினால், ஆகஸ்ட் 27-ம் தேதி சந்திரனில் லேண்டர் தரையிறக்கப்படும் என இஸ்ரோ தரப்பில் கூறப்படுகிறது.
இதனிடையே லூனா-25 என்ற விண்கலத்தை ரஷ்யா 47 ஆண்டுகள் கழித்து நிலவுக்கு ஆகஸ்ட் 11ஆம் தேதி ஆய்விற்கு அனுப்பியது. அதையடுத்து ஆகஸ்ட் 21ம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கும் போது தொடர்பை இழந்து நொறுங்கி சிதறியது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -