Rahul Gandhi Ladakh : மக்களோடு மக்களாக நான்..லடாக்கில் உலா வரும் ராகுல் காந்தி!
பைக் வழி பயணமாக லடாக்கிற்கு சென்றுள்ளார் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App“ஒப்பிட முடியாத உயரத்தில் இருக்கும் லடாக்கில் உள்ள கர்துங்லா பாஸ், அன்பு நிறைந்த இடமாகும்” என தான் பயணம் மேற்கொண்ட இடத்தை பற்றி வர்ணித்துள்ளார்.
ஆகஸ்ட் 2019 இல் ஜம்மு மற்றும் காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்ட பிறகு இப்பகுதிக்கு அவர் மேற்கொண்ட முதல் பயணம் இது.
செல்லும் வழியெல்லாம், தனது இருசக்கரத்தை நிறுத்தி மக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
லடாக் சுற்றுலா பயணிகளுடன் ராகுல்
லடாக்கில் வாழும் மக்களுடனும் குழந்தைகளுடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
க்யூட்டான லடாக் சிறுமிகளுடன் ராகுல்.
“அடக்கமான அன்பு நிறைந்த, லடாக்கின் மக்கள் இந்தியத்தன்மையின் சாரத்தை உள்ளடக்கியுள்ளனர்.” என லடாக் மக்கள் குறித்து பதிவிட்டுள்ளார் ராகுல்.
லடாக் பள்ளி மாணவர்களின் இசையில் திளைத்து போன ராகுல் காந்தி
தனது தந்தை மற்றும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டியே, இப்பயணத்தை மேற்கொண்டார்.
உலகின் அழகான ஏரிகளில் பாங்காங் ஏரியும் ஒன்று என தனது தந்தையான ராஜீவ் காந்தி கூறினார் என்பதை முன்னதாக பதிவிட்டு இருந்தார்.
ராஜீவ் காந்தியின் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்திய புகைப்படத்தை பதிவிட்டு அதில், “தந்தையே உங்களின் கனவு எப்போதும் இந்தியாவை பற்றி இருந்தது. உங்கள் வழியே என் வழியும். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மக்களின் கனவையும் பாரதத்தின் கனவையும் நிறைவேற்றுவேன்.” என்ற கேப்ஷனை குறிப்பிட்டுள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -