Passport Renewal 2024: பாஸ்போர்ட் காலாவதியாகிவிட்டதா? புதுப்பிக்க ரொம்ப ஈஸியான வழிகள் இதோ!
பாஸ்போர்ட்டை பத்து ஆண்டுகளுக்கு பிறகு காலாவதியாகிவிடும். எனவே, மூன்று வருடத்திற்கு முன்பு அல்லது ஒரு வருடத்திற்கு முன்பாவது பாஸ்போர்ட்டை புதுப்பிப்பது நல்லது.
சிறார்கள் பொறுத்தவரை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். அதேபோல, 15 வயது முதல் 18க்கும் வயதுக்குட்பட்டவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும்
முதலில் www.passportindia.gov.in - என்ற அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட் சேவா இணையத்திற்கு சென்று புதுப்பித்தலுக்கு பதிவு செய்ய வேண்டும்.
பெயர், பிறந்த தேதி, முகவரி போனற் அடிப்படை விவரங்களை நிரப்ப வேண்டும். சுய விவரங்களை சமர்பித்த பிறகு, பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கான கட்டணத்தை செலுத்தி சந்திப்பு தேதியை திட்டமிட வேண்டும்.
அசல் பழைய பாஸ்போர்ட், பாஸ்போர்ட்டின் முதல் இரண்டு மற்றும் கடைசி இரண்டு பக்கங்களின் அட்டெஸ்ட் செய்யப்பட்ட நகல், எமிக்ரேஷ்ன் காசோலை தேவை அல்லாது பக்கத்தின் சுய - சான்றளிக்கப்பட்ட நகல் ஆகியவை சமர்ப்பிக்க வேண்டும்.
10 ஆண்டுகள் செல்லுப்படியாகும் 36 பக்கங்கள் கொண்ட புதிய பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் ரூ.1500 ஆகும். 10 ஆண்டுகள் செல்லுப்படியாகும் 60 பக்கங்கள் கொண்ட புதிய பாஸ்போட்டுக்கான கட்டணம் ரூ.2,000 ஆகும். 5 ஆண்டுகள் செல்லுப்படியாகும் சிறார்களுக்கான 36 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட் கட்டணம் ரூ. 1,000 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.