Tamil Nadu Architecture : தமிழ்நாட்டின் பிரபலமான பாரம்பரிய கட்டிடங்கள்!
திருச்சிராப்பள்ளி ராக்ஃபோர்ட் 3.8 பில்லியன் ஆண்டுகள் பழமையானது. இயற்கையான இந்த மலையின் மீது, நாயக்கர்கள் கோட்டை கட்டினர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App1601 இல் கட்டப்பட்ட பத்மநாபபுரம் அரண்மனை சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. மேற்குதொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த அரண்மனை சிறந்த சுற்றுலா தலமாக மாறியுள்ளது.
மகாபலிபுரத்தில் அமைந்துள்ள உலகிலேயே மிகப் பெரிய புராதனச் சின்னமாக விளங்கும் அர்ஜுனன் தவம். இது தமிழ்நாட்டின் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாகும்.
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பாரம்பரிய தளங்களில், சிவகங்கை அரண்மனையும் ஒன்று. சிவகங்கை மாவட்டத்தில் ஒரு காலத்தில் இருந்த அரண்மனை காலப்போக்கில் கவுரி விலாசமாக மாறியது.
தமிழ்நாட்டின் பழமையான அருங்காட்சியகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது தஞ்சாவூர் அரண்மனை. சோழர், பல்லவ, பாண்டிய மற்றும் நாயக்கர் காலங்களின் பண்டைய ஓவியங்கள், பொருட்கள், படங்கள் மற்றும் சிற்பங்கள் ஆகியவற்றின் தாயகமாக உள்ளது.
1644 ஆம் ஆண்டு சென்னையில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை நிறுவப்பட்டது. தமிழ்நாட்டின் இந்த பிரபலமான பாரம்பரிய தலம், மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக பிரிட்டிஷ் ஆட்சியின் மையமாக செயல்பட்டது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -