Ooty Flower Show : சுற்றுலா பயணிகளை ஆச்சரியப்படுத்தும் உதகை மலர் கண்காட்சி!
பிரசாந்த் | 11 May 2024 10:42 AM (IST)
1
மலர் கண்காட்சியை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா துவக்கி வைத்தார்.
2
ஆண்டுதோறும் மே மாதத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோடை விழா நடத்தப்படுகிறது.
3
2024-ம் ஆண்டிற்கான துவக்க காட்சியாக இன்று மலர்க்காட்சியும், ரோஜா காட்சியும் துவங்கியது.
4
மலர் அலங்காரங்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.
5
ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் மலர் கண்காட்சியை கண்டு ரசித்து வருகின்றனர்.
6
மலர் கண்காட்சி இன்று முதல் 20 ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது.
7
உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட நீலகிரி மலை இரயிலின் நீராவி என்ஜின் மலர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
8
குழந்தைகளைக் கவரும் வகையில் டிஸ்னி உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது.