Today Movie Releases : அர்ஜுன் தாஸ், அமீர், கவின் ..இதில் வென்றது யார்?
இலன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள படம் ஸ்டார். லால், அதிதி போஹங்கர்,ப்ரீத்தி முகுந்தன் மற்றும் கீதா கைலாசம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞன் சினிமாவில் சாதித்தானா? இல்லையா?என்பதே படத்தின் கதை. படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை பக்க பலமாக அமைந்துள்ளது. இந்த படத்தை குடும்பத்துடன் சென்று பார்க்கலாம்.
மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம் பாவா தயாரித்து இயக்கியுள்ள படம் உயிர் தமிழுக்கு. இந்த படத்தில் ஹீரோவாக அமீர் , ஹீரோயினாக சாந்தினி ஸ்ரீதரன் நடித்துள்ளனர்.
இது ஒரு காதல் கலந்த அரசியல் படம். படத்தில் நிறைய லாஜிக் மிஸ்டேக் உள்ளது. வித்தியாசமான படம் பார்க்க நினைப்பவர்கள் ஒரு முறை பார்க்கலாம்.
இயக்குநர் சாந்தகுமார்- அர்ஜுன் தாஸ் கூட்டணியில் இன்று (மே 10) வெளியாகியுள்ள படம் ரசவாதி. சாந்தகுமார் பட வரிசையில், இது ஒரு த்ரில்லர் படமாக அமைந்துள்ளது
படத்தின் கதை விறுவிறுப்பாக போவதே படத்தின் மைனஸாக மாறியது. இருப்பினும், த்ரில்லர் படம் விரும்புவோர் ரசவாதி படத்தை ஒரு முறை பார்க்கலாம்