T nagar Skywalk : தியாகராய நகரில் மிக நீண்ட ஆகாய நடைமேடை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்!
சென்னையின் மிகப்பெரிய பகுதியான தியாகராய நகரில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆகாய நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநீண்டு காலமாக கட்டப்பட்ட பாலப் பணிகள் கடந்த ஓராண்டாக விரைவாக கட்டி முடிப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
570 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பாலத்தில் தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளது.
சென்னை தியாகராய நகரில் ரூ 30 கோடி ரூபாய் செலவில் கட்டபட்டுள்ள ஆகாய நடைபாதையை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
தியாகராய நகர் இருக்கும் கூட்ட நெரிசலை குறைக்கும் விதமாகவும் தி.நகர் பேருந்து நிலையம் முதல் மாம்பலம் ரெயில் நிலையம் வரை ஆகாய மார்க்கமாக செல்ல இப்பாலம் கட்டப்பட்டுள்ளது
இந்தியாவிலேயெ மிக நீண்ட ஆகாய நடைமேடை என்கிற சிறப்பை இந்த நடைமேடை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -