✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Purple Cap Holders : ஐ.பி.எல் வரலாற்றில் 'பர்பில் கேப்’பை தட்டிச்சென்ற கிரிக்கெட் வீரர்கள்!

ஜோன்ஸ்   |  16 May 2023 06:31 PM (IST)
1

2008 ஆம் ஆண்டுதான் ஐ.பி.எல் தொடங்கப்பட்டது. முதல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி 22 வீக்கெட்களை எடுத்த சோஹைல் தன்வீர் பர்பில் கேப்பை தட்டிச்சென்றார்

2

2009ல் நடந்த இரண்டாவது சீசனில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடி 23 வீக்கெட்களை எடுத்த ஆர்.பி.சிங் பர்பில் கேப் வீரர் ஆனார்

3

2010ல் நடந்த மூன்றாவது சீசனில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் ப்ரக்யன் ஓஜா தனது துரிதமான பவுலிங்கில் 21 வீக்கெட்களை எடுத்து பர்பில் கேப் வீரர் ஆனார்.

4

2011 ஆம் ஆண்டு நடந்த நான்காவது சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி தனது வித்தியாசமான பந்துவீச்சால் 28 வீக்கெட்களை எடுத்த லசித் மலிங்கா பர்பில் கேப் வீரர் ஆனார்

5

2012ல் நடந்த ஐந்தாவது சீசனில் டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்காக விளையாடி 25 வீக்கெட்களை எடுத்த மோர்ன் மோர்க்கெல் பர்பில் கேப்பை தட்டிச்சென்றார்

6

2013ல் நடந்த ஆறாவது ஐ.பி.எல் சீசனில் சென்னை சூப்பர் கிங் அணிக்காக விளையாடி 32 விக்கெட்களை குவித்த டுவைன் ப்ராவோ பர்பில் கேப்பை தட்டிச்சென்றார். இன்று வரை இவரின் சாதனையை யாரும் முறியடிக்கவில்லை

7

ஏழாவது ஐ.பி.எல் சீசனிலும் சென்னை சூப்பர் கிங் அணிக்காக விளையாடி 23 வீக்கெட்கள் எடுத்த மோகித் ஷர்மா பர்பில் கேப் வீரர் ஆனார்

8

எட்டாவது ஐ.பி.எல் சீசனில் சென்னை சூப்பர் கிங் அணிக்காக விளையாடி 26 வீக்கெட்களை எடுத்த டுவைன் ப்ராவோ பர்பில் கேப் வீரர் ஆனார். தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக பர்பில் கேப்பினை சென்னை அணியின் வீரர்கள் தட்டிச்சென்றனர்.

9

அடுத்த இரண்டு ஆண்டுகள் நடந்த ஐ.பி.எல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய புவனேஸ்வர் குமார் ஓன்பதாவது மற்றும் பத்தாம் சீசனில் 23 மற்றும் 26 வீக்கெட்களை எடுத்து பர்பில் கேப் வீரர் ஆனார்

10

பதினோறாவது ஐ.பி.எல் சீசனில் கிங்ஸ் 11 அணிக்காக விளையாடி 24 வீக்கெட்களை எடுத்து ஆண்ட்ரு டை பர்பில் கேப்பை தட்டிச்சென்றார்

11

பன்னிரண்டாவது ஐ.பி.எல் சீசனில் சென்னை சூப்பர் கிங் அணிக்காக விளையாடி இம்ரான் தாஹிர் 26 வீக்கெட்களை எடுத்து பர்பில் கேப் வீரர் ஆனார்

12

பதிமூன்றாவது ஐ.பி.எல் சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அனிக்காக விளையாடி ககிசோ ரபாடா 30 விக்கெட்களை குவித்து பர்பில் கேப் வீரர் ஆனார்

13

பதினான்காவது ஐ.பி.எல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடிய ஹர்ஷல் பட்டேல் 32 விக்கெட்களை குவித்து பர்பில் கேப்பை தட்டிச்சென்றார்

14

பதினைந்தாவது ஐ.பி.எல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய யுஸ்வேந்திர சஹல் 27 விக்கெட்களை எடுத்து பர்பில் கேப் வீரர் ஆனார்

15

இந்த ஆண்டில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வரும் முகமது ஷமி இதுவரை 23 விக்கெட்களை எடுத்து முதல் இடத்தில் உள்ளார்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • ஐபிஎல்
  • Purple Cap Holders : ஐ.பி.எல் வரலாற்றில் 'பர்பில் கேப்’பை தட்டிச்சென்ற கிரிக்கெட் வீரர்கள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.