Kilambakkam Bus Stand : கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்..தேதியை குறித்த முதலமைச்சர் - எப்போது திறப்பு?
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயங்கக்கூடிய தென் மாவட்ட பேருந்துகளால், சென்னை புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு கிளாம்பாக்கம் பகுதியில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்காக காத்துக் கொண்டிருக்கிறது.
86 ஏக்கர் நில பரப்பளவில் அமைந்திருக்கின்றது. இதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்துகின்ற முயற்சி முழுமை பெற்று இருக்கின்றது
பேருந்து நிலையம் திறக்கப்பட்டால் , 2310 பேருந்துகள் தினம் தோறும் அதில் 840 பேருந்துகள் ஆம்னி பேருந்துகள் உள்ளடக்கும். கிட்டத்தட்ட ஒரு லட்சம் மக்கள் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தலாம்
பிறக்கின்ற புத்தாண்டில் மக்கள் மகிழ்ச்சியோடு இந்த பேருந்து நிலையத்திலிருந்து பயணிக்கின்ற வகையில் திறப்பு விழா அமையும். பிறக்கின்ற புத்தாண்டில் அதாவது தமிழ் புத்தாண்டில் ( தை 1 ) இந்த பேருந்து நிலையத்தை மக்கள் மகிழ்ச்சியோடு பயன்படுத்துகின்ற நிலையிலே மக்களுக்கு இந்த பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் திறந்து வைக்க உள்ளதாக சேகர்பாபு தெரிவித்தார்
பயணிகளை வரவேற்கும் வகையில் பல்வேறு இடங்களில் கற்களால் செய்யப்பட்ட சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளது
மாநகர் பேருந்து நடைமேடை எண்ணிக்கை11 எண்கள் (36,200 சதுர அடி)
இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் எண்ணிக்கை (கீழ்தளம்) 2,769
பணியில்லா பேருந்து நிறுத்தும் பாந்துகளின் எண்ணிக்கை - 144 எண்கள்