மியூசிக்கல் சேர் விளையாடுவோம்னு நினைச்சீங்களா? இளவட்ட கல்லை தூக்கி சம்பவம் செய்த பெண்கள்!
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த படூர் ஊராட்சி மன்றம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் மூன்று மண் பானையில் பொங்கல் வைத்து விழாவை ஊராட்சி மன்ற தலைவர் தாரா சுதாகர் துவக்கி வைத்தார்.
தென்மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீர விளையாட்டுகள் நடத்தப்படுவதை போல் படூரிலும் இளவட்ட கல் தூக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இதுவரை நடைபெறாத பெண்கள் இளவட்ட கல் தூக்கும் போட்டியை படூரில் நடத்தி பெண்களின் வீரத்தை வெளிக்கொண்டு வந்தனர்.
இதில் கலந்து கொண்ட பெண்கள் சுமார் 75 கிலோ எடையுள்ள இளவட்ட கல்லை அசால்ட்டாக தூக்கி வீசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர்.
இளவட்ட கல்லை தூக்க ஆண்கள் கூட்டம் முன்வராத நிலையில் பெண்கள் நான் நீ என போட்டி போட்டுக்கொண்டு முன்வந்து இளவட்ட கல்லை சிலர் தூக்க முயற்சித்தனர். சிலர் அசால்ட்டாக தூக்கி வீசினர்.
அதை தொடர்ந்து ஆண்களுக்கான 150 கிலோ எடையுள்ள இளவட்ட கல்லை தூக்கும் போட்டியில் பல ஆண்கள் கலந்து கொண்ட போதிலும் ஒருவரால் கூட அந்த இளவட்ட கல்லை தூக்க முடியாமல் போனது.
ஆண்கள் இளவட்ட கல்லை தூக்கினால் ரூபாய் 2000 பரிசு தொகை என முதலில் அறிவித்த நிலையில் இறுதியில் 6501 ரூபாய் பரிசு தொகை என்று அறிவித்தும் ஒருவர் கூட தூக்கவில்லை.
இளவட்டக்கல் தூக்கிய இரண்டு பெண்களுக்கு தலா 3 ஆயிரம் மற்றும் ஒரு பாத்திரம் பரிசாகவும், கயிற்றை பல்லால் கடித்து வாகனத்தை இழுத்த நபருக்கு தலா ஆயிரம் உள்ளிட்ட ரொக்க பரிசினை ஊராட்சி மன்ற தலைவர் தாரா சுதாகர் வழங்கினார்.
இதேபோல் டாடா ஏஸ் வாகனத்தை கயிறு கட்டி பல்லால் இழுக்கும்போட்டியில் ஆண்கள் கலந்து கொண்டு சாகசம் செய்தனர்.