Basic Indian Laws : அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள்!
போலீஸ் அதிகாரி பொது இடங்களில் தகாத வார்த்தையில் பேசுவது, திட்டுவது ஐ பி சி செக்ஷன் 504 படி சட்டப்படி குற்றமாகும். இதற்கு தண்டனையாக 2 வருடம் ஜெயில் அல்லது அபராதம் விதிக்கலாம்.
திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள் வெவ்வெறு ஜாதி அல்லது மதத்தை சார்ந்தவர்களாக இருந்தால், 1954 சிறப்பு திருமண சட்டத்தின்படி திருமணம் செய்து கொள்ளலாம்.
வெளிமாநில வாகனங்களை 1988 மோட்டார் வாகனச் சட்டத்தின் படி தமிழ்நாட்டில் ஒரு வருடத்திற்கு ஓட்டலாம். அதற்கு மேல் ஓட்ட வேண்டும் என்றால் ஆர் டி ஓ (RTO) அலுவலகத்தில் என் ஓ சி (NOC) சான்றிதழ் வாங்க வேண்டும் .
வீட்டு சுவரில் அனுமதி இல்லாமல் போஸ்டர் அல்லது நோட்டீஸ் ஒட்டினால் ஐ பி சி செக்ஷன் 425 படி சட்டப்படி குற்றமாகும்.
கோயில் திருவிழாக்களில் தகராறில் ஈடுபட்டால் ஐ பி சி செக்ஷன் 504 படி சட்டப்படி குற்றமாகும்.
திருமணத்திற்கு வரதட்சணை கேட்டால் வரதட்சணை தடைச் சட்டம், 1961 படி சட்டப்படி குற்றமாகும். இதற்கு தண்டனையாக 6 மாதம் சிறையில் வைக்கலாம் அல்லது அபராதம் விதிக்கலாம்.