Ashish Vidyarthi Movies : ஆசிஷ் வித்யார்த்தி நடித்த சிறந்த கதாபாத்திரங்கள்!
2001 ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் வெளிவந்த படம் தில். இந்த படத்தில் ஆசிஷ் வித்யார்த்தி எஸ் பி சங்கர் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் மிக கச்சிதமாக நடித்து இருந்தார்.
2002 ஆம் ஆண்டு வெங்கடேஷ் இயக்கத்தில் வெளிவந்த பகவதி படத்தில் விஜய்க்கு வில்லனாக ஆசிஷ் வித்யார்த்தி நடித்து இருந்தார். படத்தில் தன்னுடைய பெண்ணையே கொல்ல நினைக்கும் இரக்கமற்ற தந்தையாக நடித்து இருந்தார்.
2004 ஆம் ஆண்டு கில்லி படத்தின் மூலம் தரணியுடன் ஆசிஷ் வித்யார்த்தி மீண்டும் இணைந்தார். இந்த படத்தில் மகனுக்கு அட்வைஸ் செய்யும் பாசிடிவ் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். கமான் வேலு என்ற வசனத்தை இன்றும் மீம்ஸ்களில் பார்க்க முடியும்.
2005 ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளிவந்த ஆறு படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக ஆசிஷ் வித்யார்த்தி நடித்து இருந்தார். படத்தில் ஆசிஷ் வித்யார்த்தியின் கதாபாத்திரம் வில்லத்தனமும், துரோகமும் கலந்து இருக்கும்.
2008 ஆம் ஆண்டு குருவி படத்தின் மூலம் தரணி மற்றும் ஆசிஷ் வித்யார்த்தி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்தது. படத்தில் வில்லனுக்கு நண்பனாக கொண்டா ரெட்டி என்ற நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் .
2009 ஆம் ஆண்டு கந்தசாமி என்ற படத்தின் மூலம் விக்ரமுடன் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி இணைந்தார். இந்த படத்தை சுசி கணேசன் இயக்கி இருந்தார். பழுவூர் பரமஜோதி பொன்னுசாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.