Chilli Chicken : ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் சில்லி சிக்கன் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் : பச்சை மிளகாய் - 10 கீறியது , கறிவேப்பிலை , உப்பு - 1 தேக்கரண்டி , தனியா தூள் - 2 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி, கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி, இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி, தண்ணீர் - 2 கப் , சிக்கன் - 1 கிலோ , எலுமிச்சைப்பழச்சாறு - 1/2 பழம் , வெங்காயம் - 1 நறுக்கியது , குடைமிளகாய் - 1 நறுக்கியது, சோயா சாஸ் - 3 தேக்கரண்டி, சோள மாவு - 1 தேக்கரண்டி, தண்ணீர் - 1/4 கப் , சோள மாவு கலவை , கொத்தமல்லி இலை
செய்முறை :கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, தனியா தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஸ்லோ ஃப்ளேமில் வதக்கவும்.
அதன்பிறகு தண்ணீர் சேர்த்து கலந்துவிட்டு கொதிக்கவிடவும். சிக்கன் சேர்த்து மசாலாவுடன் கலந்துவிட்டு, எலுமிச்சை சாறை பிழிந்து விட்டு 20 நிமிடம் கொதிக்க விடவும்.
அதன்பிறகு நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் சோள மாவு, சோயா சாஸ் அனைத்தையும் அடுத்தடுத்து சேர்த்து 5 நிமிடம் கிளறிவிடவும்.
கடைசியாக கொத்தமல்லி இலை சேர்க்கவும் அடுப்பில் இருந்து இறக்கினால் சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் சில்லி சிக்கன் தயார்.