Chilli Bread Recipe : சூடான மசாலா டீக்கு ஏற்ற சில்லி ப்ரெட்.. செய்முறை விளக்கம் இங்கே!
மழைக்காலம் முடிந்து பனிக்காலம் தொடங்கிய பின், மாலை நேரங்களில் பசி உணர்வு தோன்றும். வெளியே சென்று சிற்றுண்டி வாங்கவும் சோம்பலாக இருக்கும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த பதிவில், மாலை நேர சிற்றுண்டியான சில்லி ப்ரெட்டை எப்படி செய்வது என பார்க்கலாம்
தேவையான பொருட்கள் : 6-8 ரொட்டி துண்டுகள்(கோதுமை ரொட்டி), நறுக்கிய வெங்காயம் 1, நறுக்கிய தக்காளி 1, கொஞ்சம் குடைமிளகாய், 4 பல் பூண்டு, அரை டீஸ்பூன் மிளகாய் தூள், கால் டீஸ்பூன் மிளகு தூள், 1 டேபிள் ஸ்பூன் தக்காளி சாஸ், சிறிது தண்ணீர், தேவையான அளவு எண்ணெய் மற்றும் கொத்தமல்லி, கொஞ்சம் வெண்ணெய்.
முதலில் ரொட்டி துண்டுகளை கட்டம் கட்டமாக வெட்டிக்கொள்ள வேண்டும். பின்னர், அடுப்பை பற்ற வைத்து அகலமான பாத்திரத்தை வைக்க வேண்டும். அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்த உடன் பூண்டு சேர்க்கவும். பூண்டு நன்றாக வதங்கிய பின்னர், வெங்காயம் சேர்க்க வேண்டும். அதுவும் நன்றாக வதங்க வேண்டும். பிறகு தக்காளி சேர்க்க வேண்டும்
அதற்கு அடுத்து குடைமிளகாயை சேர்த்து ஓரளவு வதங்கும் வரை காத்திருக்கவும். பின், மஞ்சள் தூள், மிளகு தூள் சேர்த்து மசாலா வாடை போகும் வரை வதக்கவும். இப்போது சிறிது தண்ணீர் தெளிக்கவும். பின், தக்காளி சாஸ், ரொட்டி துண்டுகளை போட்டு நன்கு கிளறவும்
அடுப்பை அணைக்கும் முன்னர், வெண்ணெய், கொத்தமல்லி சேர்க்கவும். அவ்வளவுதான், சூப்பரான சில்லி ப்ரெட் தயார். சுவையை கூட்ட சிறிது எலுமிச்சை சாறை பிழிந்து கொள்ளலாம். இதை, தேநீருடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -