Aloe Vera For Hair : 5 வகையான தலைமுடி பிரச்சினைகளை போக்க கற்றாழை ஒன்றே போதும்!
பலருக்கும் முடி தொடர்பான பிரச்சினைகள் இருக்கும். சிலருக்கு அதிகமாக முடி கொட்டும், சிலருக்கு முடி வறண்டு காணப்படும். பலதரப்பட்ட இந்த பிரச்சினைகளுக்கு, கற்றாழை ஜெல் தீர்வு தரும். அற்புதங்கள் நிறைந்த இந்த ஜெல்லை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என பார்க்கலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுடி கொட்டுவதை தடுக்க உதவும் மாஸ்க் : ஒரு டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் உடன் 4 சொட்டு ரோஸ்மெரி எண்ணெயை கலந்துக்கொள்ள வேண்டும். இந்த கலவையை ஸ்கால்பில் தேய்த்து, 15-20 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும்.
அடர்த்தியான முடிக்கான மாஸ்க் : ஒரு டேபிள் கற்றாழை ஜெல் உடன், ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணெயை சேர்க்க வேண்டும். இந்த கலவையை ஸ்கால்பில் தேய்த்து, 15-20 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும்.
மெலிதான முடி உள்ளவர்களுக்கான மாஸ்க் : ஒரு டேபிள் கற்றாழை ஜெல் உடன் ஒரு டீஸ்பூன் வெந்தய பொடியை சேர்க்க வேண்டும். இந்த கலவையை ஸ்கால்பில் தேய்த்து, 15-20 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும்.
முடி வளர்ச்சிக்கான மாஸ்க் : ஒரு டேபிள் கற்றாழை ஜெல் உடன் தேவையான அளவு அரசி கழுவிய தண்ணீரை சேர்க்க வேண்டும். இந்த கலவையை ஸ்கால்பில் தேய்த்து, 15-20 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும்.
முடி வறட்சியை போக்க உதவும் மாஸ்க் : : ஒரு டேபிள் கற்றாழை ஜெல் உடன் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை சேர்க்க வேண்டும். இந்த கலவையை ஸ்கால்பில் தேய்த்து, 15-20 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும்.
முன்குறிப்பிட்ட அனைத்து மாஸ்க்கையும் அழுக்கான தலையில் தேய்க்க கூடாது. சுத்தமான தலையில்தான் தேய்க்க வேண்டும். உங்கள் வீட்டில் கற்றாழை இல்லையென்றால், கடைகளில் விற்கும் தரமான கற்றாழை ஜெல்லை வாங்கி பயன்படுத்துங்கள்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -