Ginger:தினமும் இஞ்சி சாப்பிடுவது நல்லதா? நிபுணர்கள் சொல்வது என்ன?
உணவில் தினமும் இஞ்சி சாப்பிட வேண்டியதன் அவசியம் குறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிப்பதை காணலாம். இஞ்சி ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது. இஞ்சி,சுக்கு, அப்படியே அல்லது பொடி செய்து டீ, உணவுகளில் சேர்த்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெரினா மண்டலம் சீராக இருக்க இஞ்சி சாப்பிடுவது உதவும். வயிற்றுப் பகுதியில் உள்ள என்சைம் சுரப்பை சீர்ப்படுத்தும். செரிமானத்தை துரிதப்படுத்தும். நெஞ்சு எரிச்சல் உள்ளிட்டவற்றை தவிர்க்கும். ஒரு கப் இஞ்சி டீ அல்லது சிறிய துண்டு இஞ்சி சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்தும்.
இஞ்சியில் ’gingerol’ பயோ ஆக்டிவ் காம்போனண்ட்ஸ் இருப்பதால் ஆன்டி-இன்ஃபளமேட்ரி ஆக செயல்படுகிறது.இதய ஆரோக்கியம் மேம்பட உதவும். வாந்தி, குமட்டல் உள்ளிட்டவற்றை போக்க இஞ்சி சாப்பிடுவது பயனளிக்கும். இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பதால் உடல்நலத்திற்கு நன்மைகள் உண்டு.
இஞ்சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அடிக்கடி உடல் நல கேடு, சளி, காய்ச்சல் ஏற்படுவர்கள் இஞ்சி டீ பருகினால் உடல்நிலை சரியாகும். இது பாக்டீரியல் தொற்றை எதிர்த்து போராடும் அளவிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.
உடல் எடையை நிர்வகிக்க, குறைக்க இஞ்சி சாப்பிடுவது உதவும். இது உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்கப்படுத்துவதால் குடல் ஆரோக்கியம் மேம்படும். அப்போது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைவது துரிதப்படும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -