Corn Spinach Pasta: ஆரோக்கியமான பாஸ்தா; கீரை சேர்த்து செய்து அசத்துங்க! ரெசிபி!
என்னென்ன தேவை? பாஸ்தா (பென்னே, ஸ்பிரிங் உங்கள் விருப்பத்திற்கேற்ப) - ஒரு கப் ஸ்வீட்கார்ன் - 1 1/2 கப் பாலக்கீரை விழுது - ஒரு கப் சிவப்பு, மஞ்சள், பச்சை குடை மிளகாய் - தலா ஒன்று க்ரீம் - அரை கப் பூண்டு - 2 பல் துருவிய சீஸ் - ஒரு கப் பால் - ஒரு கப் உப்பு -தேவையான அளவு ஓரிகானோ, சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு ஸ்பூன் (தேவையான அளவு)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபாஸ்தாவில் சேர்க்க வேண்டிய மூன்று வண்ண குடைமிளகாய், பூண்டு, ஸ்வீட்கார்ன் ஆகியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டும். பாலக்கீரையை நன்றாக வதக்கி மிக்ஸியில் அரைத்து எடுக்க வேண்டும். 1 நிமிடங்களுக்குள் அரைத்தால் மட்டுமே போதும். அதிக நேரம் கீரையை அரைக்க கூடாது.
ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் வெண்ணெய் சேர்த்து அதில் பூண்டு சேர்த்து வதக்கவும். பின், அதில் பாஸ்தா, நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகள் ஆகியவற்றை கலந்து 1 நிமிடம் வதக்கவும்.
இதில் பால், கொஞ்சம் க்ரீம், சீஸ் உள்ளிட்டவற்றை சேர்க்கவும். தேவையெனில் சிறிதளவு தண்ணீர் சேர்க்கலாம். பாஸ்தாவிற்கு தேவையானவற்றை கலந்து மூடி வைத்து 10 நிமிடங்கள் நன்றாக வேக வைக்க வேண்டும்.
10 -15 நிமிடங்களுக்குள் வெந்துவிட்டும். பாஸ்தா, காய்கறிகள் வெந்ததும், அதில் ஓரிகானோ, சில்லி ஃப்ளேக்ஸ், அரைத்த கீரை விழுது, சீஸ், கொஞ்சம் க்ரீம் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும். அவ்வளவுதான். கூடான பாஸ்தா தயார். இதை பாஸ்தாவை தனியாக வேக வைத்தும் செய்யலாம். ஒயிட்சாஸ் இதோடு சேர்ப்பது சுவையாக இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -