Green Tea:க்ரீன் டீ பிரியரா?அரை சிட்டிகை மிளகுத் தூள் சேர்ப்பதில் உள்ள நன்மைகள்!
க்ரீன் டீயில் உள்ள கேட்சின்கள் (Catechin) பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இது குடல் ஆரோக்கியம், தோல், மூளை செயல்பாடு மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. அதோடு, எடை அதிகரிப்பதையும் இது தடுக்கிறது. பெரும்பாலும், உடல் எடையை நிர்வகிக்கவே பால் கந்த டீக்கு பதிலாக க்ரீன் டீ பலரின் தேர்வாக இருக்கிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appக்ரீன், மிளகுத் தூள் இரண்டிலும் பயோஆக்டிவ காம்ப்வுண்ட் இருப்பதால் உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்கப்படுத்தும். இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். குடல் ஆரோக்கியமான இருந்தால் உடலில் பல்வேறு செயல்பாடுகள் சீராக இயங்கும் என்று சொல்லப்படுகிறது.
மிளகில் உள்ள பைப்ரின் சுவாச கோளாறுகளுக்கும் உதவும். சளி, காய்ச்சல், சைனஸ், ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ளவும் மிளகு உதவும்.
க்ரீன் டீயில் அரை சிட்டிகை அளவு மிளகுத் தூள சேர்த்து அருந்தலாம். இது இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க, இன்சுலின் சென்சிட்டிவிட்டி சீராக இருக்க உள்ளிட்டவற்றிற்கு உதவும்.
உணவுப் பொருட்களில் மிளகு சேர்க்கப்படும்போது வைட்டமின், மினரல்ஸ் ஆகியவை உடலில் உறிஞ்சப்படுவது மேம்படும். வைட்டமின் ஏ, சி, பி6. செலீனியம், இரும்புச்சத்து, கால்சியம் உள்ளிட்டவைகள் உணவில் பைபரின் இருக்கும்போது உறிஞ்சப்படுவதும் சிறப்பாக இருக்கும் என்று நிபுணர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -