Corn Palak Pulao:பாலக்கீரையில் சுவையான புலாவ் செய்து அசத்துங்க - இதோ ரெசிபி!
அரிசியை நன்றாக சுத்தம் செய்து தண்ணீரில் 15-30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். கீரையை நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்து அதை நறுக்கை வைக்கவும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகுக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு எல்லாம் சேர்த்து அதோடு சீரகம், பச்சை மிளகாய் சேர்க்கவும். நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். உப்பு சேர்க்கவும்.
இதோடு, ஸ்வீட்கார்ன், நறுக்கிய பாலக்கீரை சேர்த்து நன்றாக வதக்கவும். தேவையெனில் மிளகாய் பொடி சேர்க்கலாம். பின்னர், அரிசி, தேங்காய் பால், சேர்த்து நன்றாக கலக்கவும். குக்கரை மூடி 3 விசில் விடவும்.ஸ்வீட்கார்ன் பாலக்கீரை புலாவ் ரெடி.
இதை முழுவதுமாக தேங்காய் பாலில் செய்யலாம். இல்லையெனில், செய்யும் அரிசியின் அளவுக்கு ஏற்றவாறு பாதி தேங்காய் பால், மீதி தண்ணீர் சேர்க்கலாம். இதை செய்ய இன்னொரு முறையும் இருக்கிறது
தேங்காய் பால் சேர்க்காமல் செய்யலாம். வேக வைத்த சாதத்தோடு, தேவையான பொருட்களை வதக்கி அதோடு கலந்தும் செய்யவும். சுவை மாறுபடும். இதற்கு தக்காளி சேர்ப்பது கூடுதல் சுவையை தரும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -