Cooking Tips : கடலை எண்ணெய் நீண்ட நாள் கெட்டுப்போகாமல் இருக்க இதை செய்யுங்க!
தனுஷ்யா | 19 Jul 2024 12:28 PM (IST)
1
கடலை எண்ணெயில் சிறிதளவு புளியை போட்டு வைத்தால் எண்ணெய் கெட்டுப்போகாமல் இருக்கும்
2
உருளைக்கிழங்கை சிறிது நேரம் உப்பு தண்ணீரில் ஊறவைத்து, பிறகு வேக வைத்தால் சீக்கிரமாக வெந்துவிடும்.
3
பச்சை பயறு குழம்பு செய்கையில் சின்ன வெங்காயம், வரமிளகாய் சேர்த்து தாளித்து, குழம்பு கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் நெய் சேர்த்தால் சுவையாக இருக்கும்
4
ஆப்பம் சுடும் போது அந்த மாவில் சிறிதளவு கோதுமை மாவை சேர்த்து கொண்டால் ஆப்பம் சீக்கிரத்தில் காய்ந்து போகாமல் இருக்கும்
5
வாணலியில் ஒரு பிடி முருங்கைக் கீரையை நெய் விட்டு வதக்கி சிறிது தேங்காய் சேர்த்து அரைத்து கொதிக்கும் சாம்பாரில் விட்டால் சுவையாக இருக்கும்