✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Egg Puff:வீட்டிலேயே முட்டை பப்ஸ் செய்யலாம்.. இப்படி செய்து அசத்துங்க!

சசிகலா   |  21 Apr 2024 02:33 PM (IST)
1

ஒரு கிண்ணத்தில் ஒன்றரை கப் அளவு கோதுமை மாவு,  தேவையான அளவு உப்பு , இரண்டு ஸ்பூன் அளவு வெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். இந்த மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து இந்த உருண்டை மீது எண்ணெய் தடவி மூடி  வைத்து விட வேண்டும். 

2

இப்போது அடுப்பில் கடாய் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சிறிது கடுகு சேர்த்து பொரிந்ததும், நறுக்கிய ஒரு சிறிய சைஸ் வெங்காயம், சிறிது கறிவேப்பிலை,  நறுக்கிய 2 பச்சை மிளகாய், நறுக்கிய முட்டை கோஸ் ஒரு கப் சேர்க்கவும்

3

மேலும் இதனுடன் அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய ஒரு சிறிய சைஸ் குடை மிளகாய் சேர்த்து இதில் தேவையான அளவு உப்பு, கால் ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் தனி மிளகாய் தூள், அரை ஸ்பூன் மல்லி தூள், கால் ஸ்பூன் மிளகு தூள், கால் ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும்.

4

கடைசியாசி சிறிது நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி கிளறி விட்டு இறக்க வேண்டும். 3 முட்டைகளை அவித்து பாதி பாதியாக வெட்டி வைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு கிண்ணத்தில் இரண்டு டேபிள் ஸ்பூன் சமையல் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து வைத்து கொள்ளவும். இப்போது இந்த மாவை சப்பாத்திகளாக தட்டி வைத்துக் கொள்ளவும். 

5

இப்போது ஒரு திரட்டிய சப்பாத்தியை எடுத்து தட்டில் வைத்து இதன் மீது எண்ணெய் மற்றும் வெண்ணெய் கலந்து வைத்துள்ள கலவையை ஒரு பிரஷ் வைத்து தேய்த்து விட வேண்டும். இதன் மேல் மேலும் இரண்டு சப்பாத்திகளை வைக்கவும். ஒவ்வொரு சப்பாத்தியின் மீதும் வெண்ணெய் தடவ வேண்டும்.   இப்போது இதை திருப்பி போட்டு சப்பாத்தி கட்டையால் சற்று அகலமாக தேய்த்து விட்டு இதை சதுர வடிவில் 8 துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

6

இப்போது வெட்டிய ஒரு சப்பாத்தி துண்டின் மீது சிறிது கலவை மற்றும் பாதி முட்டை வைத்து பப்ஸ் போல் மடித்து ஒரு பேனில் சிறிது எண்ணெய் சேர்த்து இதில் 4 சமோசாக்களை சேர்த்து பொன்னிறமாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். இருபுறமும் திருப்பி விட்டு வேக வைத்து எடுத்தால் மொறு மொறு முட்டை பப்ஸ் தயார். 

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Egg Puff:வீட்டிலேயே முட்டை பப்ஸ் செய்யலாம்.. இப்படி செய்து அசத்துங்க!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.