Cream Sandwich Recipe : சூப்பரான க்ரீம் சான்விச்சை இப்படி செய்யுங்க.. குழந்தைகளுக்கு கண்டிப்பா பிடிக்கும்!
கிரீம் சீஸ் சான்விச் செய்ய தேவையான பொருட்கள் : கோதுமை ரொட்டி, கிரீம் சீஸ் - 1 கப், கேரட்- 1 கப் நறுக்கியது, பச்சை குடமிளகாய் நறுக்கியது, சிவப்பு குடமிளகாய் நறுக்கியது, மஞ்சள் குடமிளகாய் நறுக்கியது, வெள்ளரிக்காய் நறுக்கியது, வெங்காய தாள் நறுக்கியது, பூண்டு நறுக்கியது, பச்சை மிளகாய் - 1 நறுக்கியது, கொத்தமல்லி இலை நறுக்கியது, இட்டாலியன் சீசனிங், மிளகு - 1தேக்கரண்டி உப்பு - 1 தேக்கரண்டி
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகிரீம் சீஸ் சான்விச் செய்முறை : ஒரு பெரிய கிண்ணத்தில் கிரீம் சீஸை எடுத்து கொள்ளவும். நறுக்கிய கேரட், பச்சை குடைமிளகாய், சிவப்பு குடைமிளகாய், மஞ்சள் குடைமிளகாய், வெள்ளரி, பூண்டு மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும்.
இதன் சுவையை கூட்ட இத்தாலியன் சீசனிங், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். நன்றாக கலந்து தனியாக வைக்கவும்.
கோதுமை ரொட்டியை எடுத்து ஓரத்தில் உள்ள கடினமான பகுதியை அகற்றவவும். ரொட்டி துண்டில் ஒன்றில் கலவையை வைக்கவும், அதை மற்றொன்றால் மூடி வைக்கவும்.
சான்விச்களை உங்களுக்கு ஏற்றவாறு வெட்டி கொள்ளுங்கள். இதை உடனடியாக சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -