Wheat Aappam : கோதுமை மாவில் மெது மெது ஆப்பம்..செய்முறை இதோ!
அரை மூடி தேங்காயை துருவி எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து மைய அரைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் வடித்த அரை கப் சாதத்தையும் சேர்த்து நன்றாக மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.
இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.இந்த கலவையுடன் ஒரு கப் கோதுமை மாவு சேர்த்து மாவை அளந்த கப்பால் முக்ககால் கப் அளவு தண்ணீர் சேர்த்து மாவை கரைத்துக் கொள்ள வேண்டும். அல்லது பீட்டர் கொண்டு கட்டி இல்லாமல் கலந்து விட வேண்டும்.
ஆப்ப மாவு பதத்திற்கு மாவை கரைத்துக் கொள்ள வேண்டும். இதை குறைந்தது 7 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.
ஆப்பம் சுடும் போது மாவின் பதத்தை பார்த்து தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கலந்து கொள்ளலாம்.
இப்போது ஆப்ப சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி ஆப்பம் ஊற்றி மூடி போட்டு வெந்ததும் எடுத்துக் கொள்ளலாம்.
இந்த ஆப்பம் தேங்காய் பாலுடன் சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும். கோதுமை மாவில் செய்வதால் இந்த ஆப்பம் நார்ச்சத்து நிறைந்ததாகவும் இருக்கும்.