Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Tender Coconut Benefits : கோடை காலத்தில் இளநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
தேங்காய் நீரில் பொட்டாசியம், மெக்னீசியம், சோடியம் மற்றும் கால்சியம் போன்ற இயற்கையான எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன. இளநீர் குடிப்பதால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். உடற்பயிற்சி செய்பவர்கள், தண்ணீருக்கு பதில் இளநீர் குடிப்பது நல்ல பலனளிக்கும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதேங்காய் நீர் மெக்னீசியத்தின் மூலக்கூறாகும். தேங்காய் நீரில் சர்க்கரை அளவும், கலோரியும் குறைவாக உள்ளதால் நீரழிவு நோயாளிகளும் இதனை தாராளமாக குடிக்கலாம்.
தேங்காய் நீர் பசி உணர்வை கட்டுப்படுத்தும். செரிமான பிரச்சனை உள்ளவர்கள் தொடர்ச்சியாக இளநீர் குடித்து வந்தால் செரிமானக் கோளாறுகள் மற்றும் வாய்வு தொல்லை நாளடைவில் குணமடையலாம்.
தேங்காய் நீர் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இளநீர் குடிப்பதால் சருமம் ஈரப்பதமாக இருக்கும். சரும சுருக்கத்தையும் குறைத்து இளமையாக வைக்க உதவலாம்
சிறுநீரக கல் இருப்பவர்களை, மருத்துவர் அதிக நீர் குடிக்க சொல்கின்றனர். தண்ணீர் குடிப்பது பலன் அளித்தாலும், அத்துடன் இளநீரையும் சேர்த்து கொள்ளுங்கள். தேங்காய் நீர், சிறுநீரில் உள்ள குளோரின் மற்றும் சிட்ரேட்டை வெளியேற்றுகிறது.
தேங்காய் நீரில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பேட் கலவையானது ஆரோக்கியமான பற்கள் மற்றும் எலும்புகளை பெற உதவலாம். சோம்பலான உணர்வு நிலவும் பொழுது ஒரு கப் தேங்காய்த் தண்ணீரைப் பருகுவது மனதை அமைதிப்படுத்த உதவலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -